பொங்கல் பரிசுத் தொகுப்பு - நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்..!
pongal gift token provide tomarrow
தமிழகத்தில் இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளும் தயாராக உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்படும் என்றும், அந்த டோக்கனில் உள்ள நாளில் சென்று மக்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு வீடாகச் சென்று வழங்கவுள்ளனர். நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கன்கள் விநியோகம் நாளை தொடங்க உள்ள நிலையில், ரேஷன் பணியாளர்கள், நாளை முதல் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்க உள்ளனர்.
English Summary
pongal gift token provide tomarrow