இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..14 ஆயிரம் பேருந்துகளை இயக்க ஏற்பாடு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக  இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. சுமார் 14 ஆயிரம் பேருந்துகளை இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் கொண்டாடப்படவுள்ளது,இதனை  முன்னிட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகிவருகின்றனர்.வெளியூரில் இருப்பவர்கள் சொந்தஊருக்கு செல்லவும் தயாராகிவருகின்றனர்.  

இந்தநிலையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறை மட்டுமின்றி ஜனவரி 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் 

பொங்கல் பண்டிகையை ஒட்டி  வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்என்றும்  இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்று (ஜனவரி 10) துவங்கி ஜனவரி 13-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது .

மேலும் சென்னையில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் வழக்கமாக இயக்கப்படும் 8 ஆயிரத்து 368 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது எனவும்  கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது .. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal special buses to run from today 14,000 buses to be operated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->