பெண்களை புகைப்பிடிக்க வைத்த நூதன பொங்கல் போட்டி.! வைரலாகும் வீடியோ.!
Pongal special competition ladies smoking
பெண்களை புகைவண்டியாக பீடி குடிக்க வைத்த நூதன பொங்கல் போட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே கிராமப்புறங்களில் வித்தியாச வித்தியாசமான போட்டிகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகளாக கோலம் போடுதல், லெமன் வித் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல், தண்ணீர் குடம் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளை மட்டுமே இதுவரை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தென் மாவட்ட கிராமம் ஒன்றில் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். அது என்னவென்றால் பெண்கள் யார் வேகமாக பீடியை குடித்து முடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர். அதன்படி, இந்த போட்டியில் கலந்து கொண்ட நான்கு பெண்களும் பீடியை வேகமாக இழுத்து இழுத்து விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது இந்த வீடியோவை கண்ட இணையதள வாசிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகள் ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்க வேண்டுமே தவிர சமூக சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Pongal special competition ladies smoking