பொங்கல் சிறப்பு காட்சிகளுக்கு தடையா.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகவுள்ளது. அதேபோல் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. 

இதுவும் ஜனவரி 11ம்  தேதியான நாளையே வெளியாகவுள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் 2 திரைப்படங்களும் நாளை (ஜனவரி 11ம் தேதி) ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை பல்வேறு தகவல்கள் சமூக வலைதலங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில், இதுபற்றி தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் வெளியாகி உள்ள அறிவிப்பில், "பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதாக வெளிவரும் செய்தி தவறானது.

சிறப்புக் காட்சி வெளியிடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்தில் அவர்களின் குறிப்பான கருத்துகள் தான் கேட்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal special shows are allowed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->