பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணையை முடிக்க… உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு.!
Ponmudi case High Court announcement
முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தார்.
இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதனால் அவர் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதே சமயத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடத்தி விசாரணை முடிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English Summary
Ponmudi case High Court announcement