சென்னை அருகே நடந்த கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்று, வெளிநாட்டிலிருந்து வந்த தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தடுப்புகளை உடைத்துக் கொண்டு, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் அப்படியே நிலைகுலைந்து கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயங்களின்றி உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். 

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Poonamallee Car Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->