பிரபல எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் காலமானார்.!
popular writer r narumboonathan passed away
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன். தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரியவரான இவர் யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
முதலில் வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர்.
இந்த நிலையில், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து இன்று காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
popular writer r narumboonathan passed away