சென்னையில் போலீசார் தபால் ஒட்டு செலுத்தும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் தபால் ஒட்டு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தத் தேர்தலில் சென்னை மாநகர போலீசார் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த தபால் வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், சென்னை அடையாறு, முத்துலட்சுமி சாலையில் உள்ள தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் மற்றும் சென்னை செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் போலீசார் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்த அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Post vote start in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->