ராமநாதபுரம் : சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


பரமக்குடி நகராட்சியில் உள்ள துவக்கப்பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில், 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 140 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். 

இதில், முதலில் 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால் மீண்டும் வேக வைத்து முட்டை வழங்கியுள்ளனர்.

அந்த முட்டைகளை சாப்பிட்ட 4 மாணவியர் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலியால் துடித்தனர். இதனையடுத்து மாணவர்களை உடனைடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் தற்போது நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pramakudi students eat school food after Vomiting, fainting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->