கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சேவை.!
pre paid auto service start kilambakkam bus stand
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வண்டலூா் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
பொங்கலுக்கு பிறகு, அனைத்து அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இது போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக பிரீ பெய்டு ஆட்டோ சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நேற்று முதல் கிளம்பாக்க பேருந்து நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ. 18 மட்டுமே வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதற்கு சாமியானா பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், ரூ.18 கட்டணத்தை உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
pre paid auto service start kilambakkam bus stand