"நான் எங்கேயும் போகவில்லை" - விஜயகாந்த் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவனத்தின் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தீவு திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது நினைவிடத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் முதல், சாமானிய மக்கள் வரை அனைவரும் அன்றாடம் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறனர். சிலர், அன்னதானம் வழங்கி, கேப்டனை நினைவு கூர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக சென்றார்.அப்போது, அங்கு வந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார். பின்னர் அவர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன் என கூறினார். பிரேமா உன் இருதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன்" என்று பேசியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

preacher said grace in vijayakant memorable place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->