#கடலூர் | கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்த பலி.!! வளைகாப்புக்கு சென்ற போது துயரம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பயணம் செய்த போது கர்ப்பிணி பெண்ணுக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவசரத்திற்காக ரயிலின் அபாய சங்கிலி இழுத்த போது வேலை செய்யாததால் அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினர் ரயிலை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடுவதற்கு 3 மணி நேரமானதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரே இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant lady unfortunately fall from train and died in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->