திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் அலறிய கர்ப்பிணி பெண்! துடிக்க துடிக்க தூக்கிச் சென்ற அவலம்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே மலை கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை 7 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச் சென்ற மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நெக்கான மலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிரசவ வலியால் துடித்த பெண்ணை டார்ச் வெளிச்சத்தில் சுமார் 7 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்று வள்ளிப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணைக்கு சிறிது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமத்தில் பாம்பு கடித்ததில் குழந்தை உயிரிழந்த நிலையில் அதன் பிறகு அம்மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மலை கிராமத்திலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சாலை வசதி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant woman was picked up by public due to lack of road facilities near Tirupattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->