திண்டுக்கல் : பணம் கேட்டு தொந்தரவு செய்த கணவர் - மன உளைச்சலில் மூன்று மாத கர்ப்பிணி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பணம் கேட்டு தொந்தரவு செய்த கணவர் - மன உளைச்சலில் மூன்று மாத கர்ப்பிணி தற்கொலை.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது-பெனாசிர் சித்திகா. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்றுள்ளது. இந்த நிலையில் பெனாசிர் சித்திகா நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பெனாசிர் சித்திகாவின் தயார் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி மகளின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இது தொடர்பாக பெனாசிர் சித்திகாவின் தயார் தெரிவித்ததாவது, ‘’நேற்று காலை எனது மகளைப் பார்க்க வந்தபோது அவள் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், கணவர் சாகுல் ஹமீது அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், எனது மகளின் மாமனாருக்கு கால்களைப் பிடித்து விட சொல்லி கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்றிரவு என் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

என் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவருடைய மாமனார், மாமியார் மற்றும் கணவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய வேண்டும்" என்று  தெரிவித்தார். வரதட்சணை கொடுமையால் மூன்று மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnent lady sucide in dindukal for harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->