மருத்துவமனையில் ரூ.2000 ரூபாய் லஞ்சம்! உயிருக்கு மரியாதை இல்லை - பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


கோவை : சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் டாஸ்மார்க் மதுவில் கிக் இல்லாததால் கலாச்சாராயத்தை நோக்கி மக்கள்  செல்வதாக மூத்த அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

டாஸ்மார்க் மதுவில் குவாலிட்டி  இல்லை என்று அமைச்சரே ஒத்துக் கொள்கிறார். எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடையை வைக்க முடியும். ஆனால் காவல் நிலையங்களை வைக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், டாஸ்மார்க், கலாச்சாராயம், போதை பொருட்கள், என சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து குழந்தை பலியாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. உயிருக்கு மரியாதை இல்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடும் இன்றி முடங்கியுள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha Vijayakanth press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->