தமிழ் புத்தாண்டு - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து.!!
prime minister modi wishes tamil new year
சித்திரை ஒன்றாம் நாளான இன்று மாநிலம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில் குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதாவது, குடியரசுத் தலைவர் முர்மு, "நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என வாழ்த்துகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:- "இந்த புத்தாண்டு வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
prime minister modi wishes tamil new year