#வேலூர் || கொலை வழக்கில் கைதான ஆயுள்தண்டனை கைதி 'நந்தா' தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி காணவில்லை என்று, காவலர்கள் தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக தண்டனை பெற்று வருகிறார்.

ஆயுள் தண்டனை கைதிகளை சிறை வளாகம் மற்றும் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய கட்டடங்களை சுத்தம் செய்யக்கூடிய பணிகளை ஈடுபடுவார்கள். அந்த வகையில் வேலூர் மத்திய சிறைக்கு வெளியே உள்ள ஒரு கட்டிடத்தில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள, 21 ஆயுள் தண்டனை கைதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால், இன்று மதியம் உணவு இடைவேளையின் போது கைதிகள் அனைவரும் சரியாக இருக்கிறார்களா? என்று சிறைக்காவலர்கள் எண்ணிப் பார்த்தபோது, 20 கைதிகள் மட்டுமே இருந்துள்ளனர். 

இதில், நந்தா என்ற முத்துக்குமார் காணவில்லை என்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர் வேறு எங்கேனும் சிறை வளாகத்தில் உள்ளே இருக்கிறாரா? அல்லது கட்டிடத்தில் வேறு எந்த பகுதியிலாவது பதுங்கி உள்ளாரா? இல்லை தப்பித்து சென்று விட்டாரா என்பது குறித்து போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prisoner Nanda escapes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->