நாமக்கல்லில் பயங்கரம்: தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை.! மர்ம கும்பலுக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(24). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை சசிகுமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து எருமப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சமூக இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உடலை வாங்குவோம் என்று சசிக்குமாரின் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பிற்காக அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சசிகுமாரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private employee hacked to murder in namakkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->