புதுக்கோட்டை : 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! முழு விவரம் இதோ.!
Private Employment camp on May 19 in Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
நடைபெறும் இடம்:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வி தகுதி:
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ
வயது:
18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Private Employment camp on May 19 in Pudukkottai