சென்னையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்து.. 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே சாலை தடுப்பில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு கல்லூரிக்கு செல்லும் பொழுது குன்றத்தூர் அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private engineering college bus accident in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->