தனியார் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயம்! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்!
Private school class room injured five students
குன்றத்தூர் அருகே தனியார் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர்:
காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்துள்ள கோவூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென பெயர்ந்து விழுந்ததில், 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதனை அடுத்து பள்ளி நிர்வாகம், காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் மாணவர்கள் காயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்திருப்பதை பார்த்த பெற்றோர் இது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.
தகவலறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த மாங்காடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
English Summary
Private school class room injured five students