தனியார் பள்ளி அதிக கட்டணம் வசூல் : பாமகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்!!
Private school high fee collection pmk protest
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி திருவோடு எந்தி பாமகவினர் போராட்டம்.
ஒவ்வொரு முறை குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின் பொது அதிக கட்டணம் வசூலிப்பதும் டோனேசன் என்ற பெயரில் பெற்றோர்களிடம் இருந்து பணத்தை சுரண்டுவதும் வாடிக்கை ஆகி விட்டது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை காந்திநகர் பகுதியில் அரசு நிதி உதவி பேரும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறுப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பகுதி 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் பள்ளி நுழைவு வாயிலில் திருவோடு எந்தி போராட்டம் நடத்திய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Private school high fee collection pmk protest