சொன்ன தேதிக்கு முன் பள்ளிகளை திறக்க கூடாது! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!
private School Reopen issue Chennai june 2023
வருகின்ற ஜூன் ஏழாம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட எந்த பள்ளிகளும் திறக்க கூடாது என்று, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதியும் (இன்று), ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று, ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளி மாணவ - மாணவிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தனர்.
இது குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை மற்றும் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், தமிழக முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் மாதம் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு சில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
மேலும், இன்றே பள்ளி திறக்கப்படுவதாகவும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் ஜூன் ஏழாம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் திறக்க கூடாது என்று பள்ளிகளில் துறை உத்தரவிட்டுள்ளது.
English Summary
private School Reopen issue Chennai june 2023