பதிவுத்துறை இணையதளத்தில் மீண்டும் சிக்கல்! குறைபாடுகளை சரி செய்ய மக்கள் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் பத்திர பதிவு துறை இணையதளத்தில் வில்லங்கம் சரிபார்க்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர் வில்லங்கம் ஏதும் உள்ளதா என்பதை சரி பார்க்க சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கில் இதை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

வில்லங்கம் சரிபார்க்க பொதுமக்கள் தங்களின் முழு விவரங்களை அளித்து பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய இணையதளம் அனுமதி அளிக்கும். மேலும் ஒரு சர்வே எண்ணுக்கு ஓராண்டுக்கான வில்லங்க விவரம் சரிபார்க்க ரூ.450 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரப்பதிவு இணையதளம் பாதியிலேயே முடங்கி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பத்திர பதிவுத்துறை அறிவுறுத்தலின்படி லாக் இன் செய்து வில்லங்க விவரங்களை சரி பார்க்க பலமுறை முயற்சி செய்ய வேண்டி உள்ளது. அவ்வாறு முயற்சி செய்து உள்ளே நுழைந்தாலும் இணையதளம் பாதியிலேயே முடங்கி விடுகிறது. இதனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இதே நிலையை தொடர்வதால் வில்லங்க விவரங்களை சரி பார்க்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தமிழக அரசு பத்திரப்பதிவு இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problem in checking the file on the registry website


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->