மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!
Professors involved in fraud will be banned from continuing to work
மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மொத்தம் 52,500 பேராசிரியர்களின் 1900 காலி பணியிடங்கள் இருந்து நிலையில் அதை சரி கட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றுவது போல் காண்பித்துஅங்கீகாரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி விசாரணையில் இந்த ஆண்டு இணைப்பு சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை எடுத்து தமிழக ஆளுநர் ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணா பல்கலைக் கழக துணைவேந்த வேல்ராஜ் தெரிவித்ததாவது, போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
விளக்கம் கேட்டு 180 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொறியியல் பேராசிரியர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 295 பொறியியல் கல்லூரிகள் சிக்கி உள்ளன. மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 972 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Professors involved in fraud will be banned from continuing to work