பதவி உயர்வு, பதவி நிரந்தரம்..முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை!
Promotion, Permanent Promotion. Chief Minister Rangasamy
புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உருவாக்குவது மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு விளையட்டுத்துறைன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து,முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் (SDAP ) 2 வது பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் (SDAP ) 2 வது பொதுக்குழு கூட்டம், வணிக வரி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, நமச்சிவாயம், ஜெயக்குமார் , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புதுச்சேரி கைப்பந்து சங்க தலைவர் கல்யாண சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் , விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்,
இக்கூட்டத்தில் ஊழியர்கள் நியமிப்பது, பதவி உயர்வு, பதவி நிரந்தரம்,புதிய விளையாட்டு சங்கங்கள் சேர்க்கை, புதிய விளையாட்டு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தை புதுச்சேரியில் நடைமுறை படுத்தி, புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உருவாக்குவது மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு விளையட்டுத்துறைன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
English Summary
Promotion, Permanent Promotion. Chief Minister Rangasamy