ஆளுநரின் உரை சரியே! புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அறிக்கை!
PT krushnasamy Say About Governor Speech
சென்னையில் நேற்று குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அவரின் உரையில், "சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின்படி ஆளுநரின் கடமையாகும்.
ஆனால், தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா?. என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்து இருந்தால் நிராகரிப்பதாகத்தான் பொருள். இரண்டாவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென்றால். 3வது வாய்ப்பு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தான் வழிமுறை.
நாட்டின் காப்பர் தேவையில் 40%-ஐ நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை, மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி பெறப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி பேசினார்.
ஆளுநரின் இந்த உரைக்கு தமிழக அரசியல் காட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் பேசியது சரியே என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "ஆளுநரின் விளக்கம் ”ரம்மி தடைச் சட்டத்திற்கு” ஆதரவாகத்தானே உள்ளது?
”ஒரு மசோதாவின் மீது ஆளுநருக்கு சந்தேகம் வந்து, அதன் மீது விளக்கம் கேட்டு, மசோதாவை திருப்பி அனுப்பினால், அதை சட்டமன்றம் மீண்டும் அதை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அதை மறுக்க முடியாது”
ஆளுநரின் இந்த விளக்கம் தமிழக அரசின் ”ரம்மி தடைச் சட்டத்திற்கும்” பொருந்தும் தானே?
பின், ஏன் முதல்வர் அவசரப்பட்டு ஆளுநரை ”சர்வாதிகாரி” என விமர்சனம் செய்ய வேண்டும்?" என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
PT krushnasamy Say About Governor Speech