மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்! திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால், மக்கள் குறைதீர் கூட்டத்தை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வரும் 28-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். அப்போது பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

#Public Grievances Program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->