போலி பத்திரப்பதிவுகளை ரத்து சட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு! - Seithipunal
Seithipunal


பத்திரப்பதிவை ரத்து செய்யும் உரிமை மாவட்ட பதிவாளருக்கே வழங்கப்பட்டுள்ளதால் பொதுநல வழக்கு! 

தமிழகம் முழுவதும் மோசடி போலி பத்திர பதிவுகளை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவு சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்ய முடியும். 

பத்திரப்பதிவு சட்டம் விதி 22 ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால் அந்த பதிவை தானாக முன்வந்தோ, புகார் மீதோ, ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும் பதிவு ரத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கும் இந்த பத்திரப்பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.

அதன் மீது பதில் பெறப்பட்டால் அதை கருத்தில் கொண்டு ஆவணப் பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். மாவட்ட பதிவுத்துறை தலைவருக்கு இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பத்திரப்பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

இந்த சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரோகியராஜ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பத்திரப்பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு கால இடைவெளியும் வைக்கப்படவில்லை. இது ஒரு முரணான சட்ட திருத்தம். மோசடி பத்திரங்கள் என்பதை முடிவு செய்ய எந்தவிதமான விதிமுறைகள் நடைமுறைகள் வகுக்கப்படவில்லை.

 இந்திய சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் உரிய சாட்சியங்கள் வேண்டும். இதற்கு சரியான அமைப்பு உரிமையியல் நீதிமன்றம் தான். மாவட்ட பதிவாளர் அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட திருத்தத்தை தடை விதிக்க வேண்டும். சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" எனவும் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் மாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்த பொழுது அரசு தரப்பு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public interest case against the law to cancel fake deed records


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->