சென்னை : மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு தடை.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், பாதுகாப்பு கருதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public is not allowed to go to the Jayalalithaa memorial in the marina


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->