திண்டுக்கல் | போலீசாரை அச்சுறுத்தும் மதுபோதை பயங்கரவாதி! - Seithipunal
Seithipunal


அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்:

திண்டுக்கல்: பழனி 11வது வார்டு பெரியகடை வீதியை சேர்ந்தவர் மணி. இவர் குடிபோதையில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, அப்பகுதியில் யாராவது வந்தாலும் வெட்டுவேன் என தொடர்ந்து மிரட்டியுள்ளார். 

மேலும் அவரது வீட்டின் முன்பு அரிவாளை வைத்து அமர்ந்து கொண்டு யாரும் இந்த தெருவை கடந்து செல்லக்கூடாது, அதனை மீறினால் வெட்டி கொலை செய்து விடுவேன் எனற இவரது மிரட்டல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போல் பழனி புறநகர் பகுதிகளிலும், மர்ம நபர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

அண்மையில் கூட தேனி, பெரியகுளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற போலீசாரை வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

public sickle gone police attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->