தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தடையா? திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்!
Puducherry Online Gambling ban law
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து உள்ளார்.
அவரின் உரையில், "ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார்.
மேலும், "மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. சட்ட ஒழுங்கைப் பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், இதயமுள்ளவர்கள் யாரும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
இதற்க்கு பாஜக உறுப்பினர்கள் முழு ஆதரவையும் தெரிவித்து, இதனை சட்டமாகவே நாங்கள் கொண்டு வர கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Puducherry Online Gambling ban law