பூலித்தேவன் 309-வது பிறந்த நாள் : எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
Pulithevans 309th birthday Edappadi Palaniswamis floral tribute
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும் நாளை காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதற்கிடையே 1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்த போது, பூலித்தேவன் தனது படையுடன் திருச்சிக்கு சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவன் வெற்றிபெற்றதாக 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.மேலும், பூலித்தேவர் ஆட்சி செய்த காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவும் ஆகும்.
ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pulithevans 309th birthday Edappadi Palaniswamis floral tribute