தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மரணம்! கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணை! - Seithipunal
Seithipunal


புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை கிடைக்காமல் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில், கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட உள்ளதாக சென்னை மாநகர ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் பிரசவித்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த பட்டியல் இன பெண் ஜனகவள்ளி (வயது-28) உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனையில் காலமானார். 

இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், உயிரிழந்த ஜனகவள்ளி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், கருணை அடிப்படையில் அவரது கணவருக்கு அரசு வேலையும் வழங்க கோரியும் பெருநகர சென்னை  மாநகராட்சியின் ஆணையரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, 98 வது வட்ட கவுன்சிலர் ஆ. பிரியதர்ஷினி ஆகியோர் மனு அளித்தனர்.

அவர்களின் அந்த மனுவில், "தேவையான நேரத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உயிரிழந்த ஜனகவள்ளி குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடும், கருணை அடிப்படையில் அவரது கணவருக்கு அரசு வேலையும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும்,  விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puliyanthoppu Pregnant lady death issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->