சொத்து குவிப்பு வழக்கு - பொன்முடியின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு.!
punishment announce to minister ponmudi for property case
வருமானத்திற்கு மேலாக சொத்து குவித்த வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நேற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விடுதலை செய்ததை ரத்து செய்து இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளது .
மேலும், அவர்களுக்கான தண்டனை விபரங்களை நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததுடன், இருவரும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று காலை 10.30க்கு தண்டனை குறித்த விபரங்கள் அறிவிக்கபடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
punishment announce to minister ponmudi for property case