#மயிலாடுதுறை | மாணவிக்கு ஆபாச மெசேஜ்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து! உறவினர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர், சிதம்பரம் - சீர்காழி சாலையில் இயங்கி வரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அந்த மாணவி, மாணவன் திலீப்குமாரிடம் தெரிவிக்க, அவர் நேரடியாக பேராசிரியர் இடம் "இதுபோல் இனி மெசேஜ்கள் அனுப்பாதீர்கள், உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்போம்' என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் கீழவள்ளம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசன் என்பவரின் உதவியை நாடியதாகவும், அருள் அரசன், மாணவன் திலீப்குமார் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.

படுகாயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கத்திக்குத்து வாங்கிய மாணவரின் உறவினர்கள் தற்காலிக பேராசிரியரை கைது செய்ய கோரி, புத்தூர் அரசு கலைக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது உள்ளனர். பாலியல் புகார் அளிக்கப்பட்டு, கத்திக்குத்து சம்பவம் வரை அரங்கேறியுள்ள நிலயில், இந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பகுதி வாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puttur govt college student case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->