#சிதம்பரம் : பைக்கில் வந்ததுக்கு சண்டை போட்ட மனைவி.. கணவன் எடுத்த மோசமான முடிவு.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புவனகிரி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவியும் மூன்று மகன்களும் இருந்துள்ளனர். 

சிதம்பரத்தில் ஒரு கோழி இறைச்சி கடையை ராமமூர்த்தி நடத்தி குடும்ப செலவுகளை கவனித்து வந்துள்ளார். அவர் சில நேரங்களில் இருசக்கர வாகனத்திலும் சில நேரங்களில் பேருந்திலும் பணி முடித்து வீட்டிற்கு வருவது வழக்கம். 

அதுபோல நேற்று முன் தினம் அவர் இருசக்கர வாகனத்தில் பணி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் எதற்கு இவ்வாறு நடந்து கொண்டீர்கள்.? பேருந்தில் வந்திருக்கலாமே.?" என்று மனைவி இந்திராவதி கடிந்துக் கொண்டார். 

இவ்வாறு மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட அதன் பெயரில் மன உளைச்சலில் இருந்த ராமமூர்த்தி தன்னுடைய வீட்டு மாடிக்கு சென்று அங்கிருந்தவாறு புக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puvanakiri men suicide for wife scolding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->