நாகர்கோவிலில் மக்கள் வீட்டிலிருந்தே வரி செலுத்த கியூஆர்கோடு வசதி.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் மக்கள் வீட்டிலிருந்தே வரி செலுத்த கியூஆர்கோடு வசதி.!

தற்போதைய நவீன காலத்தில் அனைத்துமே தொழில்நுட்பமயமாகி உள்ளது. அதிலும் முக்கியமாக பணம் எடுப்பதற்கோ அல்லது பணம் அனுப்புவதற்கோ வங்கிக்கு சென்று கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அந்த காலம் எல்லாம் மலையேறிப்போய் தற்போது ஆன்லைன் செயலிகள் மூலமாக பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் வரி செலுத்துவதற்கு  கியூஆர்கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம்  மக்கள் தங்களது வீடுகளில் இருந்தே மாநகராட்சி சேவைகளை பெற முடியும். இந்த கியூஆர்கோடு அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட உள்ளது. 
இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே வரி செலுத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல், புகார் தெரிவித்தல் மற்றும் இதர மாநகராட்சி சேவைகள் உள்ளிட்டவைகளை பெற முடியும். அந்த வகையில், முதற்கட்டமாக 28-வது வார்டு பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கியூ ஆர் கோடு நேற்று ஒட்டப்பட்டது. 

இந்த ஏற்பாடு அனைத்தும் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அனைத்து வார்டுகளில் உள்ள  வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

qr code facility in nagarcovil corporation for peoples pay taxes at stay home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->