கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது - ஆர். எஸ் பாரதி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. ஒரு இரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. 

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆரால் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கம் மட்டும் தான். கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. 

இந்தக் கட்சிக்கு வரும் போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்பு கடைசி வரை இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

r s bharathi speech karunanithi birthday function in nagari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->