கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் எப்போது? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Rain relief fund for mayiladuthurai district From November 24
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் சுமார் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களில், வெள்ளிநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
English Summary
Rain relief fund for mayiladuthurai district From November 24