தமிழகத்தில்.. அடுத்த 7 நாட்களுக்கு "சம்பவம் தொடரும்".! வானிலை மையம் கொடுத்த அலெர்ட்.!
Rain will continue for 7 days in tamilnadu
கடந்த மாதம் செய்த கனமழையால் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் மிதமான மழை இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரக்கூடிய 4 முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகப்பட்டினத்தில் 16 செமீ மழையும், திருப்பூண்டியில் 12 செமீ மழையும், வேளாங்கண்ணியில் 19 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
English Summary
Rain will continue for 7 days in tamilnadu