ஆடியோ விவகாரம் | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மாவட்ட செயலாளர் பதவிக்காக ரூ.1 கோடி பேரம் கே.பி முனுசாமி பேசியதாக ஆடியோ ஒன்றை, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். 

அந்த ஆடியோவில் 50 ரூபாய் தயாராக இருப்பதாகவும், மீதம் 50 ரூபாய் மாலைக்குள் தயார் செய்து விடுவதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்க, அதற்க்கு கே.பி முனுசாமி, இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது மகனை அனுப்பி வைப்பதாக பதிலளிக்கிறார்.

இந்த விவகாரம் அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி தெரிவிக்கையில், "ஆடியோவில் உள்ளது என் குரல் தான். பணம் வாங்கியதும் உண்மைதான். ஆனால்,அதற்கான காரணம் வேறு" என்று விளக்கம் அளித்தார்.

கே.பி முனுசாமி பதிலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, "அவர் பேசியதற்கு பதில் சொன்னால் மரியாதை இருக்காது. மாவட்டச் செயலாளர் பதவியை யார் கொடுக்கிறார்கள்..? அவர் மனசாட்சியோடு நேராக என் முன் வந்து இதை சொல்லட்டும்" என்றார்.

இந்நிலையில், 'அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜம்' என்று, ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதியளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "ஓ.பி.எஸ். ஆதரவாளர் கெளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ உண்மை. ஆனால், எம்.எல்.ஏ. சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டார் என்பதில் உண்மையில்லை; அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜம்" என்று, ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajendra balaji say about ops side audio


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->