அ.தி.மு.க.வில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது - ராஜேந்திர பாலாஜி.!
rajenthira balaji answer to mapa pandiyarajan
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
"மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த அவருக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன். நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் தான் மாபா. பாண்டியராஜன்.
எனகுனு ஒரு தனி வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது? அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். ஏன் சென்னையில் சென்று பேசுகிறார்?
எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.விற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
rajenthira balaji answer to mapa pandiyarajan