ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி விடுதலை குறித்து இன்று தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடா்ந்த வழக்கின் தீா்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கின்றது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த தீா்மானத்தின் மீது ஆளுநா் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, நளினி, ரவிச்சந்திரன் வழக்கின் தீா்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று அறிவிக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv Gandhi murder case nalini judgement today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->