ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த  மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநர் கையெழுத்து அவசியம் என்பதால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். 

இந்நிலையில். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நளினி. ரவிச்சந்திரன் விடுதலை கோரி தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது.

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajiv gandhi murder issue nalini case judgement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->