இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் தொகுப்பு..திமுக வழங்கியது!
Ramadan compilation for Muslim people Provided by DMK
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த இஸ்லாம் சமூகத்தினருக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு புடவை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை திமுக பொறுப்பாளர் எஸ். கோபால் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த இஸ்லாம் சமூகத்தினருக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு புடவை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு இரா. சிவா அவர்களின் அறிவுறுத்தலால் புதுச்சேரி மாநில பொதுக்குழு உறுப்பினரும் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான திரு. எஸ். கோபால் அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கும் பணியினை உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெரு, சங்கொத்தியம்மன் கோவில், முல்லைநகர், செங்கேணியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திரு. எஸ். கோபால் அவர்கள் ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்.
அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், சசிகுமார், துணை செயலாளர் கண்ணதாசன், வர்த்தகர் அணி துணை தலைவர் குரு, துணை அமைப்பாளர் ஜெயப்ரகாஷ், தொண்டர் அணி துணை தலைவர் மதனா, இளைஞர் அணி தாமரை, தொண்டர் அணி துணை அமைப்பாளர் சேட்டு, ஆதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் வெங்கட், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டிபன்ராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அர்ஜுன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் விமல், கழக நிர்வாகிகள் முரளி, மூர்த்தி, பெரோஸ், அமர், பாண்டியன், பாக்யராஜ், ஆனந்த், பாபு, அமுல், நாராயணன், பிரவின், நாகராஜ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary
Ramadan compilation for Muslim people Provided by DMK