"பிரேக்கப்" சொன்ன காதலி.. ஏற்றுக்கொள்ளாத காதலன் மரணம்.! ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் ஆர்எஸ் மங்கலம் பகுதியில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது. இதில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த நல்லசாமி என்ற இளைஞர் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். 

இத்தகைய நிலையில், நல்லசாமி பணிபுரிந்த நேரத்தில் ஓர் பெண்ணை சென்ற 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு காதலை கைவிட சொல்லி நல்லசாமியிடம் அந்த காதலி வற்புறுத்தியுள்ளார். ஆனால், நீ இல்லாமல் இருக்க முடியாது என்று கூறி நல்ல சாமி அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், அந்த காதலிக்கு இதில் துளியும் உடன்பாடில்லை. எனவே, நல்லசாமியுடன் பேசுவதை அந்த பெண் தவிர்த்துள்ளார். எனவே இந்த சூழலை ஏற்று கொள்ள முடியாமல் இருந்து வந்த நல்ல சாமி காதலியின் உதாசீனத்தை தாங்க முடியாமல் தான் தங்கியிருந்த அறையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து நல்லசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிழைப்பு தேடி வந்த இடத்தில் மகன் மரணித்ததை தாங்க முடியாமல் அந்த பெற்றோர் மனம் நொந்து விதையில் வாடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanadhapuram Youngmen Suicide For Love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->