பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி உட்பட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறப்பு புலன் விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு. தமிழ்நாடு காவல்துறை குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., (படைத்தலைவர்) அவர்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB CID) மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram paramakudi case change to CBCID


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->