ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை திறப்பில் மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி ஒரு மாதம் மட்டும் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு மார்கழி மாதம் நாளை பிறக்கவுள்ளதை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"டிசம்பர் மாதம் 16-ந் தேதி குரோதி வருடம் மார்கழி 1-ந் தேதி பிறப்பதை தொடர்ந்து டிசம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 13-ந் தேதி வரை தனுர் மாத பூஜையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும். பின்னர் அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெறும்.

காலை 5 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 7.30 மணிக்கு விளா பூஜையும், 10 மணிக்கு கால சந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், நடைபெறும். 

இதையடுத்து நண்பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் மூன்று மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும். மாலை ஆறு மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை, இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rameshwaram ramanathaswami temple gate open time change for markazhi month


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->