தை அமாவாசை - ராமேஸ்வரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்.!
rameshwaram temple gate open time change for thai amavasai
காசிக்கு அடுத்தபடியான புண்ணிய ஸ்தலமாக உள்ள உலக புகழ்பெற்ற ராமேசுவரம் கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.
இந்த நிலையில் இந்த தை அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலை முழுவதும் காவல்துறை சார்பில் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது.
ஐந்து மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அமாவாசை என்பதால் பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rameshwaram temple gate open time change for thai amavasai